திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த சின்னக்காம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிர்வாகப் பணியை செய்துவருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அலுவலகக் கட்டடத்தின் ஆங்காங்கே பல பகுதிகளில் தற்போது விரிசல் ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையிலுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் இக்கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
அப்படி விழுந்தும் அதைக் கண்டுக்கொள்ளாத கிராம நிர்வாக அலுவலர், தொடர்ந்து தனது பணியை செய்துவருகிறார். இதனால் அங்கு வரும் பொதுமக்கள் கட்டடத்தின் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டடத்தை சீரமைக்க, உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:
திருச்செந்தூர் கோயிலில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான வழக்கு - தள்ளுபடி