ETV Bharat / state

கரோனா காலத்தில் மாதத் தவணை கட்ட வலியுறுத்தும் தனியார் வங்கிகள்! - dindugul district news

திண்டுக்கல்: தனியார் வங்கிகள் கரோனா காலத்தில் மாதத் தவணை கட்ட வலியுறுத்துவதாகவும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

private-banks-insisting-on-paying-monthly-installments-in-dindugul

author img

By

Published : Jun 6, 2021, 10:46 AM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் செல்லாண்டிய அம்மன் கோவில் தெரு, நாராயணபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் அன்றாடம் வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தும் மக்களே அதிக அளவில் வசித்துவருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர்.

மேலும், இந்த ஊரடங்கு காரணமாக வேலையிழந்து கடந்த 15 தினங்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உணவிற்கே சிரமப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் வங்கிகள் அவர்களது முகவர்கள் மூலமாகவும், செல்போனில் தொடர்புகொண்டும் பணத்தைக் கட்டச் சொல்லி வலியுறுத்துவதாகவும், ஊரடங்கு முடிந்தபின்பு பணத்தைச் செலுத்துவதாகக் கூறினாலும் ஏற்க மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேற்று (ஜூன் 5) தனியார் வங்கியைச் சேர்ந்த முகவர் பணம் வசூலுக்காக நாராயண பிள்ளை தோட்டத்திற்கு வந்தபோது பொதுமக்கள் அவரைச் சத்தம்போட்டு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:10 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.