ETV Bharat / state

கர்ப்பிணி மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது!

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

சாலையோரம் இறந்து கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்
author img

By

Published : Oct 25, 2019, 10:21 AM IST

வேடசந்தூர் வசந்த் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(26). இவரது மனைவி சுஷ்மிதா(19). ஒரே தனியார் ஆலையில் வேலை பார்த்துவந்த இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். சுஷ்மிதா தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.

தினேஷ்குமார் தனது மனைவியைக் காணவில்லை என்று தேடிவந்த நிலையில் நேற்று கவுண்டச்சிபட்டி சாலையில் இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மாயமானதால் நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என காவல் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வேடசந்தூர் காவல் துரையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல் துறையினரின் விசாரணையில் திடீர் திருப்பமாக அவரது கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.

வேடசந்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தினேஷ்குமாருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த விபரம் நான்கு மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கணவரை அவர் கண்டித்துள்ளார்.

சாலையோரம் கிடந்த நிறைமாத கர்ப்பிணியின் சடலம்

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் வேலைக்குச் செல்வது போல் சென்று தனது மனைவியை தனியாக தோட்டத்துக்கு அழைத்து வந்து அவரை கொலை செய்துள்ளார். பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கழுத்தில் இருந்த நகைளை மட்டும் எடுத்து தனது பெண் தோழியின் வீட்டில் பதுக்கி வைத்ததை காவல் துறையினரின் விசாரணையில் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மைனர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் போக்சோ சட்டத்தில் கைது

Intro:திண்டுக்கல் 24.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

நிறைமாத கர்ப்பிணியை தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கொலைசெய்த கணவன் கண்ணீர் விட்டு கபட நாடகம் ஆடிய அவலம்

Body:திண்டுக்கல் 24.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

நிறைமாத கர்ப்பிணியை தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கொலைசெய்த கணவன் கண்ணீர் விட்டு கபட நாடகம் ஆடிய அவலம்

வேடசந்தூர் வசந்த் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவரது மனைவி சுஷ்மிதா (19). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த சுஷ்மிதா நேற்று கவுண்டச்சிபட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்க்கு செல்லும் சாலை ஓரமாக இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள், மாயமானதால் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் அளித்தார்.

அதன் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுஷ்மிதா உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணை யில் சுஷ்மிதா தனது தாய் தந்தையை சிறுவயதிலே இழந்து ஆதரவற்ற பெண் என்றும் தெரியவந்தது

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்துவந்த முருகேசன் ஜான்சிராணி தம்பதியினருக்கு பிறந்த சுஷ்மிதா மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவரும் பிள்ளைகள் என்று தெரியவந்தது இவ்விருவரும் சிறுவயதில் இருக்கும் பொழுது அவர்களது தாய் தந்தை உடல் நலக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாகவும் அருகில் குடியிருந்து வந்த கனகராஜ் மற்றும் இந்திராணி ஆகிய தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை என்று அனாதையாக நின்ற சுஷ்மிதா சகோதரர் சுபாஷ் சந்திர போசை தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார்கள்

போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொலை செய்து நாடகமாடியது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தினேஷ்குமார் வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இதே மில்லில் சுஷ்மிதாவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்துக்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தனது மாமியார் வீட்டிலேயே மனைவியுடன் வசித்து வந்துள்ளார். மருமகனுக்காக அவரது மாமனார் கனகராஜ் டாடா ஏஸ் வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து மனைவியை நன்றாக கவனித்து வந்துள்ளார்.

ஆனால் வேடசந்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாட்டீஸ்வரி என்ற பெண்ணுடன் தினேஷ்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த விபரம் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சுஷ்மிதாவுக்கு தெரிய வந்தது. இதனால் கணவரை அவர் கண்டித்தார்.

மேலும் அவரது செல்போனையும் வாங்கி யார்? யாருக்கு போன் செய்துள்ளார்? என அடிக்கடி சோதித்து வந்துள்ளார். இதனால் தனது கள்ளக்காதலியை பார்ப்பதை தவிர்த்து வந்தார். இருந்தபோதும் அவர் அடிக்கடி தினேஷ்குமாருக்கு போன் செய்து வந்துள்ளார். இந்நிலையில்தான் கள்ளக்காதலி நமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது மேலும் எதற்க்கு குழந்தை என்ற அறிவுரையின் பேரில் தனது மனைவியை கொலை செய்ய தினேஷ்குமார் திட்டமிட்டார்.

வேலைக்கு செல்வது போல் சென்று விட்டு தனது மனைவியை மட்டும் தனியாக தோட்டத்துக்கு அழைத்து வந்தார். அங்கு அவரிடம் சுஷ்மிதா மீண்டும் கள்ளத்தொடர்பு குறித்து தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்துள்ளார். பின்னர் தன்னை காப்பாற்றிக் கொள்ள கழுத்தில் இருந்த நகைளை மட்டும் எடுத்து தனது கள்ளகாதலியின் தாயார் வேலம்மாள் என்பவரதான திண்டுக்கல் அருகே கீழதிப்பம்பட்டியில் உள்ள வீட்டில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார்

பின்னர் தனது வீட்டுக்கு சென்று சுஷ்மிதா இங்கு வந்தாரா? என கேட்டுள்ளார். அவர் வரவில்லை என தெரிந்ததும் மீண்டும் தனது மாமியார் வீட்டுக்கு வந்து சுஷ்மிதா பற்றி விசாரித்தார். பின்னர் மாமியார், மாமனாருடன் சேர்ந்து தேடுவது போல் அங்கும் இங்கும் தேடிப்பார்த்துள்ளார். அப்போது சாலையின் ஓரமாக இறந்து கிடந்த தனது மனைவியை பார்த்து கதறி அழுதுள்ளார். அதன் பின் அவரே கூம்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மனைவியை யாரோ கொலை செய்து விட்டனர் என்று புகார் அளித்துள்ளார்.

கர்ப்பிணி சுஷ்மிதா இறந்தது குறித்து முதலில் புகார் வந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத தினேஷ்குமாரும் அவரது தாயும் சுஷ்மிதாவை நகைக்காக கொலை செய்து விட்டனர் என கூறியுள்ளார்.

ஆனால் நகைக்காக கொலை நடந்திருந்தால் அவர் காதில் அணிந்திருந்த தோடு, கொலுசு, செல்போன் ஆகியவற்றை கொள்ளையன் விட்டு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. மேலும் கொலை நடந்த இடம் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அந்நியர் யாரேனும் வந்தால் அது உடனடியாக தெரிந்து விடும்.

எனவே கணவரே தனது மனைவியை அழைத்து வந்து கொலை செய்து விட்டு விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே என் மனைவியை நகைக்காக கொலை செய்து விட்டனர் என வார்த்தைக்கு வார்த்தை போலீசில் கூறி வந்தார். இதனால் போலீசாருக்கு தினேஷ்குமார் மீது சந்தேகம் வலுத்தது. திண்டுக்கல்லுக்கு தினேஷ்குமாரை வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கள்ளக்காதலி பாண்டீஸ்வரி அவரது தாய் வேலம்மாள் சகோதரர் பால்பாண்டி மற்றும் அவரது சகோதரி ஆகியோரை வேடசந்தூர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை செய்துவருகிறார்கள்

பேருந்தில் சென்றால் கூட கர்பிணிக்கு தனி மறியாதை கொடுத்து அமர்த்தி பயணம் செய்து அழகு பார்க்கும் பண்புள்ள நாட்டில்
கணவனே.. தன் கள்ளக் காதலுக்காக நிறைமாத கர்ப்பிணியை கொலை செய்ததும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவருக்கும் சட்டம் தகுந்த தண்டனையை கொடுக்கத் அவர்களும்கூட கிராமப்பகுதிகளில் இப்படிப்பட்ட அவர்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் குடும்ப பழக்கவழக்கங்கள் இன்றி தண்டனை கொடுப்பது என்பது நிதர்சனமான உண்மைConclusion:திண்டுக்கல் 24.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

நிறைமாத கர்ப்பிணியை தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கொலைசெய்த கணவன் கண்ணீர் விட்டு கபட நாடகம் ஆடிய அவலம்

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.