தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அனுமதிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொடைக்கானலில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி இ- பாஸ் முறை அமல்படுத்தி சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென சுற்றுலா தொழிலை நம்பிய வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலதரப்பினர் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் இருந்தற்காக கரோனா தொற்று பரப்பும் விதமாக செயல்பட்டதாக கூறி 30 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.