ETV Bharat / state

திண்டுக்கல்லில் இளைஞருக்கு விருது வழங்கி பாராட்டிய காவல் துறை

கரோனா ஓவியங்களைத் துல்லியமாக வரைந்த இளைஞருக்கு, இளம் ஓவியருக்கான விருது வழங்கி காவல் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

author img

By

Published : Aug 23, 2021, 6:14 AM IST

திண்டுக்கல்லில் இளைஞருக்கு விருது வழங்கி பாராட்டிய காவல்துறை

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஹரிஹரன். இவர் கரோனா காலத்தில் தனது எண்ணங்களில் தோன்றியவற்றை, 100-க்கும் மேற்பட்ட ஓவியங்களாக வரைந்துள்ளார். பின்னர் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஓவியங்கள் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றது.

ஹரிஹரனின் ஓவியத் திறமையைக் கண்ட தன்னாா்வலர் பால்தாமஸ், இது குறித்து தெற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளர் அபுதல்ஹாரிடம் எடுத்துக் கூறியுள்ளார். உடனடியாக இளைஞர் ஹரிஹரனை நேரில் அழைத்த ஆய்வாளர், கரோனா விழிப்புணர்வு தொடர்பான ஓவியம் வரைய வாய்ப்பு வழங்கியுள்ளார்.

அதன்படி ஹரிஹரன் வரைந்த ஓவியங்கள் பலரையும் கவர்ந்தன. இதனையடுத்து இளைஞர் ஹரிஹனுக்கு, திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இளம் ஓவியருக்கான விருது வழங்கப்பட்டது. இளைஞரின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் உற்சாகப்படுத்திய காவல் துறையினர், சமூக ஆர்வலர் ஆகியோருக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: படிக்கவே மாட்டிங்குறான் நல்லா அடிங்க... அண்ணனை வாத்தியாரிடம் போட்டுக்கொடுத்த குட்டி தங்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.