ETV Bharat / state

சாலையில் சென்ற பெண்ணிற்கு அரிவாள் வெட்டு: சட்டக் கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலை! - பெண்ணை கொலை செய்த சட்டக் கல்லூரி மாணவர்

திண்டுக்கல்: ஓபுளாபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சட்டக் கல்லூரி மாணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெண்ணிற்கு அரிவாள் வெட்டு
பெண்ணிற்கு அரிவாள் வெட்டு
author img

By

Published : Nov 10, 2020, 8:02 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஓபுளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ். இவரது மனைவி அம்பிகாபதி (37). இவர் அப்பகுதியிலுள்ள அங்கன்வாடியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவரது வீட்டிற்கு அருகே செல்வராஜ் என்பவரது மகன் விஸ்வேஷ்வரன் (20) வசித்து வருகிறார். இவர் சென்னை சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் மழை பெய்ததால் அம்பிகாபதியின் வீட்டின் அருகேவுள்ள நடைபாதையில் நீர் தேங்கி நின்றுள்ளது. இது தொடர்பாக அம்பிகாபதி குடும்பத்தினருக்கும், விஸ்வேஷ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (நவ.10) அம்பிகாபதி தெருவில் நடந்து சென்றபோது அங்கு வந்த விஸ்வேஷ்வரன், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த விஸ்வேஷ்வரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அம்பிகாபதியின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தம்பியோடியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அம்பிகாபதியை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள விஸ்வேஷ்வரனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: செய்தியாளர் கொலை வழக்கு: 'எங்களைப் பற்றி செய்தி சேகரித்ததால் வெட்டிக் கொன்றோம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.