ETV Bharat / state

வியாபாரிகளுடன்‌ காவல்துறை ஆலோசனை கூட்டம்

author img

By

Published : May 10, 2021, 7:17 AM IST

பழனியில் காவல்துறை சார்பில் வியாபாரிகளுடன்‌ முழு ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

consultation meeting
ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முழுவதும்‌ கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை(மே.10) முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. முழு ஊரடங்கின் போது மளிகை, காய்கறிக் கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்ட முக்கியமான கடைகளை காலை 6 மணி முதல் 12 மணி வரை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனியில் உள்ள வியாபாரிகளுடன் காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழனி டிஎஸ்பி சிவா பேசியதாவது, 'வியாபாரிகள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறும் வியாபாரிகள் மற்றும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் திறப்பதை வியாபாரிகள் தாங்களாகவே தவிர்த்துக்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்து கரோனா பரவல் இருந்து விடுபட வியாபாரிகளும் பங்களிக்க வேண்டும்' என தெரிவித்தார்.

இந்த ஆலோசனக்கூட்டத்தில் காவல்துறை ஆய்வாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள்‌ கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.