ETV Bharat / state

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேரத்த போலீஸ் - மூலச்சத்திரம்

திண்டுக்கல்: அவசர ஊர்திக்காகக் காத்திருக்காமல் சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்  திண்டுக்கல் சாலை விபத்து  மூலச்சத்திரம்  dindigul accident news
சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவலர்கள்
author img

By

Published : Mar 14, 2020, 9:25 AM IST

திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள தொந்தியா பிள்ளை தெருவைச் சேர்ந்த காமாட்சி (82) என்பவர் மூலச்சந்திரம் பகுதியிலுள்ள அடகுக் கடையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து திண்டுக்கல் வந்த காமாட்சி, பேருந்திலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவர் காமாட்சி மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த காமாட்சிக்கு தலை மற்றும் உடல் பகுதிகள் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. இதற்கிடையே திண்டுக்கல்லில் நாளை முதலமைச்சர் வருகைக்காக பழனி சாலைியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி முதியவரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவலர்கள்

மேலும், அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து உறவினர்கள் வந்தவுடன் விட்டுச் சென்றனர். ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் போலீசார் உதவிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டும் விழா: பணிகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.