திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நெகிழி மாசில்லா கொடைக்கானலை உருவாக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
மூஞ்சிக்கல் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி ஏழு வழி சாலை வழியே கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்த கொண்டனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் படுகாயம்