ETV Bharat / state

திருக்கார்த்திகை தீபத்திருவிழா...பழனியில் குவிந்த பக்தர்கள் - karthigai deepam

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி மலைக் கோவிலுக்கு சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

மலைக் கோவிலுக்கு ஒருவழிப்பாதையில் மட்டுமே அனுமதி

author img

By

Published : Dec 6, 2022, 12:41 PM IST

திண்டுக்கல்: நாடு முழுவதும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பழனி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

திருக்கார்த்திகை முன்னிட்டு பழனி கோயிலில் குவிந்த பக்தர்கள், மலை அடிவாரத்தில் இருந்து பழனி மலைக்கு செல்லும் படிப்பாதைகளில் ஒவ்வொரு படிகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியபடியே மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

மலைக் கோவிலுக்கு ஒருவழிப்பாதையில் மட்டுமே அனுமதி

இந்நிலையில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்துள்ளதால் பக்தர்கள்‌ நலன் கருதி, பக்தர்கள் மேலே செல்வதற்கு குடமுழுக்கு நினைவிருக்கும் வழியாகவும், தரிசனம் முடித்து கீழே இறங்கும்போது படிப்பாதை வழியாக அடிவாரத்திற்கு வரும் வகையிலும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் வருகையை ஒட்டி பழனி கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதையும் படிங்க: வனத்துறை நிலத்தை அதிகாரிகள் பினாமிகள் ஆக்கிரமிப்பு? அரசு பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.