திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஓட்டக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர், கடந்த 2004ஆம் ஆண்டு கிணறு வெட்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் காயமடைந்தார். இந்த விபத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான கந்தசாமிக்கு விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கன்னிவாடி கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.