ETV Bharat / state

பெட்ரோல் டீசல் விலை உயர்வு - வேதனைத் தெரிவிக்கும் திண்டுக்கல் மக்கள் - petrol diesel rate increased in Kodaikanal

தமிழ்நாட்டில் அதிகப்படியாக கடலூரைத் தொடர்ந்து கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
author img

By

Published : Oct 14, 2021, 10:24 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது.

தற்போது தமிழ்நாட்டில் கடலூரைத் தொடர்ந்து பெட்ரோல் விலை திண்டுக்கல்லில் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பீட் பெட்ரோல் விலை 107.50 ரூபாய்க்கும், நார்மல் பெட்ரோல் 104.75 ரூபாய்க்கும் கொடைக்கானலில் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

டீசல் விலை கொடைக்கானலில் அதிகப்படியாக 100.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தங்களின் அன்றாடத் தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரந்து பல இடங்களில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து போராடி வரும் நிலையில், இதனை ஒன்றிய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: டீசல் புதிய சாதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.