திண்டுக்கல் மாவட்டம் செங்குளத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே மாவட்ட அலுவலகத்திற்கு தங்களது பள்ளி குழந்தைகளுடன் வந்த மக்கள், கல்குவாரியை மூடக்கோரி மாவட்ட அலுவலரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்துப் பேசிய சீதாலட்சுமி என்பவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மிக அருகாமையில் இயங்கி வரும் கல்குவாரியால் எங்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. முக்கியமாகக் காது வலி, காதுகேளாமை, ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
மேலும், குழந்தைகளை வைத்துக் கொண்டு வாசல் அருகே கூட இருக்க முடியவில்லை. திடீரென பெரிய கற்கள் வீட்டின் முன் விழுகிறது. இது தொடர்பாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.