திண்டுக்கல்: பழனி நகரின் மையப்பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் நாய்க்குட்டி ஒன்றை பின்னங்கால்களைப் பிடித்து தலைகீழாக தொங்கவிட்டபடி, இருசக்கர வாகனத்தில் வளைந்து வளைந்து சாலையில் நேற்று(ஜூன் 1) சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே கோபத்தைக் கிளப்பியது.
இந்நிலையில், இதுகுறித்து விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு நலன் அமைப்பைச் சேர்ந்த கண்காணிப்பாளர் முத்துசாமி பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் அந்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விலங்குகளைக் கொடுமை செய்தல் உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவ்வாறு நாய்க்குட்டியை கொண்டுசென்ற மகுடீஸ்வரன், அரவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.