திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திண்டுக்கல் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், காரை சோதனை செய்தனர். அதில், ஐந்து மூட்டைகளில் 55 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர், கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் பிள்ளை நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் அப்துல் அசீன்(35) என்பதும் தனது காரில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் அலுவலக பணி என பொய்யான ஸ்டிக்கர் ஒட்டி பயணித்து வந்ததும் தெரியவந்தது.
உடனே காருடன் அவரை அழைத்துச் சென்று தாடிக்கொம்பு காவல் துணை ஆய்வாளர் சுதாவிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் அளித்தத் தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் ரூரல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் வினோத், திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் தெய்வம் ஆகியோர் அப்துல் அசீனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்!