ETV Bharat / state

பேரறிவாளன் விடுதலை எதிர்ப்பு: திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் - rajiv gandhi assassination

பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டியவாறு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரறிவாளன் விடுதலை எதிர்ப்பு: திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம்

author img

By

Published : May 19, 2022, 12:46 PM IST

திண்டுக்கல்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஜாமீனில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினரும், முக்கிய பிரமுகர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அதேசமயம், பேரறிவாளனின் விடுதலை உத்தரவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டுமெனவும் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். இதன் அடிப்படையில், இன்று காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களிலும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரறிவாளன் விடுதலை எதிர்ப்பு: திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம்

அதன்படி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் வாயில் வெள்ளை துணியை கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் “வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்பது உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பேரறிவாளனை போல் சிறையில் உளள மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.