ETV Bharat / state

கொடைக்கானலில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

author img

By

Published : Jan 2, 2021, 9:04 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் திமுக ஊராட்சி ஒன்றியம் சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் கிராம சபை கூட்டம்
மக்கள் கிராம சபை கூட்டம்

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் வியூகங்கள் அமைத்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்னும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரையையும், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானலில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஆளும் அதிமுக அரசை கண்டித்தும், அதிமுக கட்சியை நிராகரிக்கரிக்கிறோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். இதைத் தொடர்ந்து கொடைக்கானலில் திமுக ஊராட்சி ஒன்றியம் சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜதுரை தலைமை வகித்தார். மக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை தெரிவித்தனர். தொடர்ந்து மனுக்களாகவும் அளித்தனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆளும் அதிமுக அரசின் ஊழல்கள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.