ETV Bharat / state

கொடைக்கானலில் தொடர்மழை: மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு - கொடைக்கானல் மழை

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் தொட‌ர்ந்து பெய்து வ‌ரும் க‌ன‌ம‌ழையால் பொதும‌க்க‌ளின் இய‌ல்பு வாழ்க்கைப் பாதிக்க‌ப‌ட்டுள்ள‌து.

KODAIKANAL HEAVY RAIN
KODAIKANAL HEAVY RAIN
author img

By

Published : Jan 14, 2021, 1:14 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம், கொடைக்கான‌லில் க‌ட‌ந்த‌ ஒரு வாரமாக‌ விட்டுவிட்டு ம‌ழை பெய்து வ‌ருகிற‌து. இந்நிலையில் க‌ட‌ந்த‌ இர‌ண்டு நாட்க‌ளாக‌ இர‌வு ப‌க‌ல் முழுவ‌தும் விடாம‌ல் க‌ன‌ம‌ழையும் அவ்வப்‌போது விட்டுவிட்டு மித‌மான‌ ம‌ழையும் பெய்து வ‌ருகிற‌து.

கொடைக்கான‌லில் பெய்து வ‌ரும் ம‌ழையால், இங்கு வ‌ரும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளுக்கு மூன்று நாட்க‌ள் த‌டைவிதிக்கப்‌ப‌ட்டுள்ள‌து. மேலும் காற்றுடன் கூடிய‌ ம‌ழையால் ஆங்காங்கே ம‌ர‌ம் சாய்ந்து போக்குவ‌ர‌த்து பாதிப்பும் ஏற்பட்டுள்ள‌து.. ம‌லைச்சாலைக‌ளில் பாறைக‌ளும் ச‌ரிந்துள்ள‌து.

மின் க‌ம்ப‌ங்க‌ளும் சாய்ந்து மின்சார‌மும் துண்டிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.. இத‌னை ச‌ரி செய்யும் ப‌ணிக‌ளில் அர‌சு ஊழிய‌ர்க‌ள் ஈடுப‌ட்டுள்ள‌ன‌ர். இத‌னால் பொதும‌க்க‌ளின் இய‌ல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து..வாக‌ன‌ங்க‌ளில் செல்லும் வாக‌ன‌ ஓட்டிக‌ள் ம‌ழையால் சிர‌ம‌த்திற்கு உள்ளாகி உள்ள‌ன‌ர்.பொதும‌க்க‌ள் பாதுகாப்பான‌ இட‌ங்க‌ளில் இருக்க‌வும் அர‌சு சார்பில் அறிவுறுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

இதையும் படிங்க: திருநெல்வேலியை மிரட்டும் மிக கனமழை: 8 மணி நேரத்தில் 260 மி.மீ., மழை கொட்டித் தீர்த்தது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.