கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, பொது இடங்களில் அதிகளவு மக்கள் கூடுவதற்குத் தடைவிதித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும்வகையில், மாநில அரசு ஆயிரம் ரூபாய் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நாயணகுண்டா பகுதியில் செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடையில், அரசு அறிவித்துள்ள நிவாரணப் பொருள்களை வாங்க வந்த மக்கள் பலர் முன்னதாகவே நிவாரணப் பொருள்களை வாங்கிவிட்டதாக ரேஷன் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரேஷன் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணத் தொகையும், பொருள்களும் வழங்க வழி செய்வதாகவும் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: கனமழையால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை