தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள் அனைத்தும் கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அரசின் உத்தரவை மீறி பலரும் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தபோது காவல் துறையினர் விதித்த அபராதம், கைது நடவடிக்கை, வழக்குப் பதிவை தொடர்ந்து அச்செயல் நடைபெறுவது குறைந்துள்ளது. தற்போது, சமூக இடைவெளி கடைப்பிடித்தலை காவல் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக உழவர்சந்தை, அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தலை பொதுமக்கள் தற்போது கடைபிடித்து வருகின்றனர். இதை மக்கள் அனைத்து இடங்களில் கடைப்பிடித்து கரோனா வைரஸ் தொற்றை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒற்றை இருமலால் காலியான சூப்பர் மார்கெட் - கரோனா பிராங்கால் ஏற்பட்ட விபரிதம்!