திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் மத்தியில் உள்ள ஏரிச்சாலை முதல் அப்சர்வேட்டரி வரையிலும் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்பணிகள் தரமானப் பொருட்கள் கொண்டு செய்யப்படவில்லை எனவும், சாலை போட்ட நாளிலேயே ஜல்லிகள் அனைத்தும் பெயர்ந்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் சாலை அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு செய்து, ஒப்பந்ததாரரிடம் சாலை தரமானதாக அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இதுகுறித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர், அப்சர்வேட்டரி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் முதற்கட்ட பணிகளே தற்போது நிறைவடைந்துள்ளது. இறுதிகட்டப் பணிகள் முடிவடையும் பொழுது சாலை உறுதியானதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்?