திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தொடர்ந்து இந்த பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலை சேதமடைந்து இருப்பதாகவும் அதனை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் தற்போது சாலை அமைக்கும் பணியானது வில்பட்டி செல்லக்கூடிய பிரதான சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை அமைக்கும் பணி முழுமை பெறாமல் ஆங்காங்கே நடைபெற்று வருவதாகவும் மேலும் சாலையை முறையாக அமைக்கப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் போடப்பட்டு சில மணி நேரங்களில் சாலை சேதமடைந்து வருவதாகவும் இதனால் அரசு பணம் வீணடிக்கப்
படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சாலை தரமற்றிருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தற்கொலை, விபத்துகளால் உயிரிழப்பு... தமிழ்நாட்டிற்கு 2ஆம் இடம்... அதிரவைக்கும் புள்ளிவிவரம்