திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு காய்கறிகள், பழவகைகள் விளைவிக்கப்படுகிறது. தற்பொழுது பேஷன் ப்ரூட் சீசன் தொடங்கியுள்ளது. இதில் நாயுடுபுரம், வில்பட்டி, அட்டுவம்பட்டி, பாம்பார்புரம், பண்ணைக்காடு, தாண்டிகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பேஷன் ப்ரூட் பயிரிடப்பட்டு சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது .
கொடியில் விளையக்கூடிய இந்த பழத்தின் ஒருகொடியில் சுமார் ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேஷன் ப்ரூட் கிடைப்பதாகவும் எந்த ரசாயனங்களும் பயன்படுத்த தேவையில்லை என்றும்; தற்பொழுது ஒரு பழம் 10 ரூபாய்க்கும் பழக்கடைகளுக்கு மொத்த விலையிலும் தருவதாகவும் இதனால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்றும்; இங்கு விளையும் பேஷன் ப்ரூட்டுக்கு கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் அதிக அளவில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், இது தினமும் கொடைக்கானலிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே, மலைக்கிராம விவசாயிகள் பேஷன் ப்ரூட் கொடிகளை அதிக அளவில் பயிரிடத் தொடங்கியுள்ளதாகவும், இது ஊடுபயிராக இருப்பதால், இதன்மூலம் அதிக லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: