திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மதுரையிலிருந்து திண்டுக்கல் மார்க்கமான கொடைரோடு அம்பாத்துரை இடையே உள்ள ரயில் பாதையில் பாறாங்கற்கள் விழுந்துள்ளன. இதனிடையே தினந்தோறும் காலையில் மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர், தண்டவாளத்தில் பாறைகளை கண்டதும் உடனடியாக கொடைரோடு அம்பாத்துறை ரயில் நிலைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரயில்வே அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ரயில் பயணிகளும் ஊழியர்களுடன் இணைந்து பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக சென்னைக்கு சென்ற வைகை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாகச் சென்றது.
இதையும் படிங்க: ’இரட்டை ரயில் பாதை பணிகள் அடுத்தாண்டுக்குள் நிறைவு’