திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே அழகாபுரியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 155 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றன. இங்கு தலைமை ஆசிரியர் உள்பட எட்டு ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பாடம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியை ஜெயந்தி என்பவர் மாணவ - மாணவிகளை ஆபாச வார்த்தைகள் பேசி கடுமையாக தாக்கியதாக, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வட்டாரத் தொடக்கப்பள்ளி அலுவலர்களுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதனைக்கண்டித்து, ஆசிரியை ஜெயந்தியை பணி நீக்கம் செய்யக்கோரி, பள்ளியை பூட்டிவிட்டு, மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை உடல் நிலை சரியில்லாத காரணத்தினார் இன்று பள்ளிக்கு வராததால், தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'கடந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ் மொழி என்றால் என்னவென்றே தெரியாது' - எழுத்தாளர் இமையம்