திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் இயங்கும் தனியார் மில்லில் பணிபுரிந்துவரும் தம்பதியின், 6 வயது பெண்குழந்தை கடந்த இரண்டாம் தேதி டிராக்டரிலிருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குழந்தையின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். மனுவில், குழந்தை மரணத்தில் டிராக்டர் வழங்கி உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ள உமா சேகரின் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது மிகவும் தவறானது.
இந்தப் பாலியல் வன்புணர்வில் உமாசேகருக்கும் அவரது மகன் தருண்குமாருக்கும் தொடர்பு இருக்கக்கூடும். எனவே அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
இதையும் படிங்க: கணவர் கொலையில் திடீர் திருப்பம் - மனைவி, மைத்துனரின் கூட்டுச்சதி அம்பலம்