திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 9ஆவது நாளான இன்று(மார்ச் 21) சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பழனி தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தனர்.
குறிப்பாக அவர்கள், பழனி சண்முக நதியில் புனித நீராடி முடிக்காணிக்கை செலுத்தி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் 'அரோகரா அரோகரா..'எனப் பக்தி பெருமுழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் ஏழு கோயில்களின் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்