ETV Bharat / state

"நாங்கள் திருடர்கள் இல்லை; எங்களை மனிதர்களாக மதியுங்கள்" - பழனி மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் ஆவேசம்! - palani dhandayuthapani temple

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பணியாற்றும் முடி எடுக்கும் தொழிலாளர்களை கோயில் உதவி ஆணையர் லட்சுமி அவமரியாதையான முறையில் பேசியதாக கூறி அவரை கண்டிக்கும் விதமாக கண்டன குறிப்புகள் அடங்கிய பேட்ச் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

பழனி மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:04 PM IST

பழனி மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் ஆவேசம்!

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவிடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடியை காணிக்கையாக செலுத்துவது வழக்க இருந்து வருகின்றது. இதற்கென கோயில் நிர்வாகம் சார்பில் சரவணப் பொய்கை, சண்முக நதி, ஒருங்கிணைந்த முடிமண்டபம், மின் இழுவை ரயில் முடிமண்டபம், தண்டபாணி நிலையம் உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் 330 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உரிமம் அடிப்படையில் வேலை செய்து வருவதால், இவர்களுக்கு நிரந்தரமான மாத ஊதியம் என்பது கிடையாது. இவர்களுக்கு தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு பணியாளருக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்த்து.

இதன் அடிப்படையில் காணிக்கை செலுத்தும் இலவச டிக்கெட்டுகளில் 30 ரூபாய் பங்கு வீதம், மாதம் தோறும் சீட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்களிடம் முடி காணிக்க செலுத்துவதற்கு பணம் பெறக்கூடாது என்றும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பெற்றதாக புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் லட்சுமி இருவரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து, 15 நாள்களுக்குப் பிறகு இரு தொழிலாளர்களும், உதவி ஆணையர் லட்சுமியிடம் மன்னிப்புக் கேட்டு பணியில் சேர்வதற்கு கோரியுள்ளனர்.

அப்போது இருவரின் மனைவிகளை அழைத்து வந்தால் மட்டுமே பணி தருவதாக கோயில் உதவி ஆணையர் லட்சுமி கூறியுள்ளார். அதனையடுத்து கோயில் பணியாளர் இருவர் தமிழரசன் மற்றும் குமரேசன் உதவி ஆணையரை சந்திக்க இருவரும் அவர்களின் மனைவியை அழைத்துச் சென்றனர்.

அப்போது தங்களுடைய கணவர்களை தினமும் திருடுவதற்கு அனுப்பி விட்டீர்களா என்றும் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள் என அவர்களின் மனம் புண்படும்படி கடுமையான சொற்களால், அவமரியாதையாக பேசியதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனை அடுத்து முடி எடுக்கும் தொழிலாளர்கள் இன்று உதவி ஆணையர் லட்சுமியை கண்டிக்கும் விதமாக, கண்டன குறிப்புகள் அடங்கிய பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து பழனி கோயிலில் முடி எடுக்கும் தொழிலாளர்களுள் ஒருவரான செந்தில் என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “இங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருப்பது யாருக்கும் தெரிவதில்லை. எங்களுக்கு ஊக்கத்தொகையும், டிக்கெட்டின் பங்கு மட்டும் தான் தரப்படுகிறது. அது எங்களுக்கான ஊதியம் இல்லை. அந்த தொகை, இன்றைய விலைவாசியின் படி எங்களுக்கு கட்டுபடி ஆவதில்லை. அதற்காகத்தான் நாங்கள் பக்தர்களிடம் பணம் வாங்குகிறோம்.

மேலும் அதிகாரி எங்களையும் எங்களின் மனைவிகளை தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். எங்களிடம் மரியாதையற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். எங்களை திருடர்களைப் போல் நடத்துகிறார்கள். நாங்கள் பக்தர்களிடம் பணம் பெறக்கூடாது என்றால் எங்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி வழக்கு; 3 மாதங்களில் தேர்வு நடத்த மதுரைக்கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.