ETV Bharat / state

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி.!

பழனி முருகன் கோயிலில் உண்டியல் மூலம் மூன்று கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.

Palani Murugan Temple  Murugan Temple  three crores through bills  bill collection  hundy counting  palani  dindigul news  dindigul news today  latest news  news today  உண்டியல்  வருவாய்  பழனி முருகன்  பழனி  பழனி முருகன் கோயில்  பழனி பகுதி வங்கி அலுவலர்கள்  பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள்  பழனியாண்டவர் கலைக்கல்லூரி
பழனி முருகன் கோயிலில் உண்டியல் மூலம் மூன்று கோடி ரூபாய் வருவாய்
author img

By

Published : Nov 26, 2022, 11:29 AM IST

திண்டுக்கல்: உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியல்களில் செலுத்துவர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டும்.

அந்த வகையில், கடந்த 24ஆம் தேதி அன்று பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. இதில் கோயில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 925 ரூபாய் வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 300 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கச் சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்கப் பொருட்கள் 840 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 18 கிலோ 125 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2-வது நாளாக நேற்று (நவ. 25) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 91 லட்சத்து 46 ஆயிரத்து 729 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 159 கிராம், வெள்ளி 1 கிலோ 254 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 117 கிடைத்தன.

இதன்மூலம் கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் 3 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரத்து 654 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 999 கிராம், வெள்ளி 19 கிலோ 379 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 417 கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் 8000 வீடுகள் விற்பனைக்கு உள்ளன - வீட்டு வசதி துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.