ETV Bharat / state

600 மேற்பட்ட காளைகள் பங்கேற்ற பழனி ஜல்லிக்கட்டு - Neykkarapatti Municipality

திண்டுக்கல்: பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

600 மேற்பட்ட காளைகள் பங்கேற்ற பழனி ஜல்லிக்கட்டு

author img

By

Published : Jan 16, 2021, 4:42 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை பழனி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதையடுத்து வாடிவாசலிலிருந்து முதல் காளையாக காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான காளை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக வாடிவாசலிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டன.

இப்போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிக்க முற்பட்டனர். 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து துள்ளி வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து அடக்க முயன்ற காட்சி காண்போரை வியக்கச் செய்தது. இருப்பினும் மாடுகள் முட்டியதில் சில மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் புகுந்து விடாதபடி 2 அடுக்கு தடுப்புகள்அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

காளையை அடக்க முற்படும் வீரர்
காளையை அடக்க முற்படும் வீரர்

இதுவரை 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் தங்கக்காசு, கட்டில், மிக்சி, கிரைண்டர், சேர், பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும், மருத்துவர்களும், கால்நடை மருத்துவர்களும் முகாமிட்டிருந்தனர். டி.எஸ்.பி சிவா தலைமையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கோட்டாட்சியர் அசோகன் தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் விலங்குகள் நலவாரிய அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளையர்களுக்கு தண்ணீர் காட்டிய அமைச்சரின் காளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.