திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள அண்ணா (உருப்பு) பல்கலைக்கழகத்தில் தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மட்டுமின்றி மூன்றடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வை-பை வசதி செய்யக்கூடாது
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே வை-ஃபை எனப்படும் இன்டர்நெட் வசதி வைப்பதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிலக்கோட்டை திமுக வேட்பாளர் முருகவேல் ராஜன் சார்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வை-ஃபை வசதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: 'ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு!'