ETV Bharat / state

பழனி கோயில் காணிக்கை இவ்வளவா! - பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

உண்டியல்
உண்டியல்
author img

By

Published : Jan 22, 2021, 10:43 PM IST

தமிழ்நாட்டின் முதன்மைக் கோயில்களில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் பங்குனி உத்திரம், தைப்பூசம் நாட்களில் அதிகளவில் சாமி தரிசனம் செய்வர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக மலைக்கோவில் பிரகாரத்தில் ஆங்காங்கே உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பக்தர்களின் வரவால் உண்டியல்கள் நிறைந்ததையடுத்து காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரொக்கமாக 1 கோடியே 68 லட்சத்து 73 ஆயிரத்து 450 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 639 கிராமும், வெள்ளி 20 ஆயிரத்து 600 கிராமும் வந்துள்ளது.

காணிக்கை
காணிக்கை

மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 43 நோட்டுக்களும் கிடைத்துள்ளன. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு எண்ணப்பட்டபோது நான்கு கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை வருவாய் கிடைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 10 நாட்களில் 1 கோடியே 68 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணியில் பழனிக்கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், பழனியாண்டவர் கலைக்கல்லூரி ஆசிரியர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.