ETV Bharat / state

'திண்டுக்கலில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை வராது' : அலுவலர்கள் நம்பிக்கை!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை வராது, குடிதண்ணீர் குறித்து அச்சப்பட தேவையில்லை என அலுவலர்கள் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

"கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை வராது" என நம்பிக்கை தெரிவித்த அலுவலர்கள்

author img

By

Published : Apr 8, 2021, 1:05 AM IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1,800-க்கும் மேற்பட்ட குளங்களில் 400-க்கும் மேற்பட்டவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், மீதமுள்ளவை ஊராட்சிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

தொடர் மழையால் அதிகமான நீர்நிலைகள்

போதிய மழையின்மையால் கடந்த நான்கு ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளங்கள், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட குளங்கள் கண்மாய்கள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், பழனி வரதமாநதி, ஒட்டன்சத்திரம் பரப்பலாறு, நங்காஞ்சியாறு, வேடசந்தூர் குடகனாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளன.

குடிநீருக்காக மக்கள் போராட வேண்டிய நிலை இருக்காது

வழக்கமாக கோடை காலம் வந்தால், திண்டுக்கல் மாவட்ட மக்கள் பாடு திண்டாட்டம் தான். குடிநீருக்காக பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபடுவது வாடிக்கையாக இருக்கும்.

இந்த ஆண்டு கூடுதலாக பெய்த மழையால், குடிநீருக்காக மக்கள் போராட வேண்டிய நிலை இருக்காது. போதுமான அளவிற்கு நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு உள்ளதால் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீருக்கு சிக்கல் வராது.

கிணறுகளிலும் நீர் நிறைந்திருப்பதால் விவசாய தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. கோடைகாலத்தில் குடிதண்ணீர் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ரெய்டுக்கு பயந்து பணத்தை எரித்த இடைத்தரகர்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.