கரோனா வைரஸ் பெரும்தொற்று பரவாமல் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தனர்.
மக்கள் ஊரடங்கை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன.
திண்டுக்கல் நகர் முழுவதும் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து நகரில் பல்வேறு பகுதியில் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றோர் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு தன்னார்வலர்கள் சிலர் தானாகவே முன்வந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவுப் பொட்டலங்களை அளித்து அவர்களது பசியைப் போக்கினர்.
மக்கள் ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணிவரை தொடரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இச்சூழலில் பொதுமக்கள் பலர் வீட்டைவிட்டு நேற்று (மார்ச் 22) மாலையிலேயே வெளியே வரத் தொடங்கினர்.
ண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திவேல் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு, அரசு பிறப்பித்துள்ள உத்தரவுபடி மக்கள் ஊரடங்கை அதிகாலை வரை தொடருவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன் கரோனா பெருந்தொற்று பரவாமல் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு: ஆள்நடமாட்டம் இல்லாத ஒட்டன்சத்திரம்!