திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை 25) பெய்த கனமழையால் ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதி, நாயுடுபுரம், அண்ணாசாலை, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, அப்சர்வேட்டரி ,பாம்பார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக விவசாய பணிகளும் தொய்வடைந்துள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு...