ETV Bharat / state

பாய், போர்வை, கட்டிலுடன் பள்ளி முற்றுகை - நிலக்கோட்டையில் நூதன போராட்டம் - நிலக்கோட்டை அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி

நிலக்கோட்டையில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியை பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்க கூடாது என கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலக்கோட்டையில் நூதன போராட்டம்
நிலக்கோட்டையில் நூதன போராட்டம்
author img

By

Published : Jun 17, 2023, 6:46 AM IST

நிலக்கோட்டையில் நூதன போராட்டம்

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே பாய், போர்வை, கட்டில் போன்றவற்றுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்களால் சற்று நேரத்திற்கு அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டிபட்டி கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியை பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்கக் கூடாது என கிராம மக்கள் அனைவரும் திரண்டு, அரசு கள்ளர் பள்ளி வளாகப் பகுதியில் தூங்கும் போராட்டம் என்று நூதன முறையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் அரசு கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்கக் கூடாது என வலியுறுத்தி நேற்று (ஜூன்15) கிராம மக்கள் அனைவரும் திரண்டு பள்ளி வளாகத்திற்குள் தூங்கப் போவதாக அறிவிப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த நூதன போராட்டத்திற்காக அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர்.

அதன்படி நேற்று மாலை கிராம மக்கள் ஒன்று திரண்டு அங்கு உள்ள காளி, பகவதி அம்மன் கோயில் முன்பு கட்டில், பாய், போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட பொருளோடு ‘தமிழக அரசே, தமிழக அரசே, இணைக்காதே இணைக்காதே, அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்காதே’ என பல்வேறு கோஷங்களும் முழக்கங்களுமிட்டு, கிராமம் முழுவதும் பேரணியாகச் சென்று அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி முன்பு சென்றனர்.

அப்போது அங்கு இருந்த நிலக்கோட்டை போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் நிலக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் ஆகியோர் பொதுமக்களை தடுத்து பள்ளி வளாகத்திற்குள் செல்லத் தடுத்தனர். அதனைத் தொடர்ந்து இதனை அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்க வேண்டாம் என்று மக்கள் பல்வேறு வகையில் போராடி வருகிறார்கள் என்ற தகவலை உயர்மட்ட அதிகாரிகள் மூலம் முதலமைச்சர் உள்பட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கொண்டு சேர்க்கிறோம் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

அதுவரை மக்கள் அமைதி காக்கும்படியும், இது போன்ற போராட்டங்களை தற்போது கைவிடும்படியும் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து மக்கள் கூறியதாவது, “அரசு இது சம்பந்தமாக மறுப்பு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், இது போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்துவோம்” என தெரிவித்தனர்.

மேலும், அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளியில் பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம் நடத்த இருப்பதாக இருந்ததால் போலீஸ் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தலைமை தகவல் ஆணையர் பதவியேற்பை புறக்கணித்த முதல்வர்.. செந்தில் பாலாஜி கைது காரணமா...பின்னனி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.