திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தரை வாடகைக் கடைகள், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பாளர்கள் கால அவகாசம் கேட்டதால், இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. அப்போது திமுக வழக்கறிஞருக்கு சொந்தமான கட்டடத்தை இடிக்க அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அலுவலகம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இதையும் படிங்க: கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு