ETV Bharat / state

NIA Raids: பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் கைது? - PFI Madurai zone leader Mohammad

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய 2 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

NIA Raids
என்ஐஏ அதிரடி நடவடிக்கை
author img

By

Published : May 9, 2023, 11:33 AM IST

பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் கைது?

திண்டுக்கல்: பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). பழனியில் டீக்கடை நடத்திவரும் முகமது கைசர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி அன்று டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்.ஐ.ஏ அதிகாரிகள் பழனி நகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மூன்று நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சதாம் என்பவரிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும், பழனி சண்முகநதி அருகே உள்ள தக்வா பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். டில்லியில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், மூன்று மாதங்களுக்கு பிறகு முகமது கைசர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதோடு, அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா? என்று உறவினர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: Breaking News: தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ(NIA) சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.