ETV Bharat / state

பாதுகாப்பு வழங்கக்கோரி புதுமண தம்பதி மனு..! - district police

திண்டுக்கல்:சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட  காதலர்கள் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

new cupple
author img

By

Published : Jul 24, 2019, 4:26 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனிபட்டியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரும், தாராபுரத்தைச் சேர்ந்த சசிபிரபா என்பவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த இவர்களது பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதி மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு

இதையடுத்து தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருவரும் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், இருவரது பெற்றோரையும் அழைத்து பேச உத்தரவிட்டுள்ளார்.

Intro:திண்டுக்கல் 24.7.19

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு.

Body:திண்டுக்கல்லில் வெவ்வேறு சமுதாயத்தை சார்ந்த காதலர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பட்டியை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் தாராபுரத்தில் உள்ள கல்லூரியில் பி.எட் பயின்றுள்ளார். அப்போது அவருடன் படித்த தாராபுரத்தை சேர்ந்த சசி பிரபா இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் சமுதாய பாகுபாடு காரணமாக இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் இருவரும் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதனால் பாதுகாப்புக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் இடம் மனு அளித்தனர். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் இருவீட்டாரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.