தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி எண் 110iன் கீழ் திண்டுக்கல் நகரk கூட்டுறவு வங்கியின் நாகல்நகர் கிளைக்கு 49.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, நாகல்நகர் கூட்டுறவு வங்கி கிளைக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் பணிகளை கூட்டுறவுத் துறை சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளது. அதன்படி திண்டுக்கல்லில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நிவாரணத் தொகை, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கூட்டுறவு வங்கிகள் மூலமாக பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க...வெட்டி வேரில் முகக்கவசம்... கவனம் ஈர்க்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்!