ETV Bharat / state

'திமுகவையும் மின்வெட்டையும் பிரிக்க முடியாது' - நத்தம் விசுவநாதன் கிண்டல் - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்

'திருவிளையாடல்' திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் பிரிக்க முடியாதது எது என வினவும் கேள்விக்கான பதிலுக்கு பொருத்தமாய் இருப்பது, 'திமுகவும் மின்வெட்டும்' என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கிண்டலடித்துள்ளார்.

நத்தம் விசுவநாதன்
நத்தம் விசுவநாதன்
author img

By

Published : Jun 28, 2021, 8:00 AM IST

திண்டுக்கல்: நத்தம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நத்தம் விசுவநாதன், நத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை நேற்று (ஜூன் 27) திறந்து வைத்தார்.

திறப்பு விழாவுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின் தடைக்குக் காரணம், அத்துறையைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாததுதான். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்தவுடன் மின்தடையும் வந்துவிடும்.

பிரிக்கமுடியாதது எது?

'திருவிளையாடல்' படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது எது என்ற கேள்விக்கு ஏற்ற பொருத்தமான பதில், திமுகவும், மின்வெட்டுமே.

தமிழ்நாட்டில் உள்ள மின்வெட்டுப் பராமரிப்புகளை, நான்கு நாட்களில் சரிசெய்துவிடலாம். ஆனால், சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், முந்தைய திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது போல மாறும் வாய்ப்புகள் உள்ளன. இன்றைய ஆட்சியில் மின்வெட்டுக்குக் காரணம், அணில் என சொற்ப காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஏழு ஆண்டுகளாக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த எனக்கு மின்வெட்டுக்குக் காரணம் அணில்தான் என்று தெரியவில்லை.

திமுக வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடும்

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட, ஒழுங்கு பிரச்னைகள் வந்துவிடும். அதேபோல் திமுகவையும் அராஜகத்தையும் பிரிக்க முடியாது.

திமுகவிற்கு அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் என ஒரு கலாசாரம் உள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தோல்வியை அடைய அதிமுக எடுத்த யுக்திகளும், வியூகங்களுமே காரணம்.

அது திமுகவினருக்கு சாதகமாக மாறி விட்டது. அதிமுகவை மக்கள் வெறுத்து ஒதுக்கவும் இல்லை, திமுகவை விரும்பி ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்தே. தேர்தல் நேரத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி எறிந்தனர். ஆனால், சில கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாத நிலை

முக்கியமான கோரிக்கையான பெண்களுக்கு நிதி உதவி வழங்கல், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் ஆகியவை ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.

கூட்டுறவுத் துறையில் 5 சவரன் நகை தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து ஆகியன பற்றியும் எவ்வித அறிவிப்பும் இல்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசு மாணவர்களின் வருங்கால வாழ்க்கையில் சூனியமான, ஆபத்தான போக்கை கையாளுகிறது' என்றார்.

இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.