திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பொதுமக்களிடம் நியாயவிலைக் கடை அரிசிகளை வாங்கி அவற்றை வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் நத்தம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது நியாயவிலைக் கடை அரிசி கொண்டுசெல்வது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிவந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துவழிவிட்டான் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து இரண்டு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அரிசி கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனிடையே நியாயவிலைக் கடை அரிசி கடத்திய சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது - நத்தம் பகுதியில் அரிசி கடத்தல்
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் நியாயவிலைக் கடை அரிசி கடத்தியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.