ETV Bharat / state

முயன்றால் முடியாது எதுவும் இல்லை-நிரூபித்த திண்டுக்கள்  இளைஞர்கள் !!! - திண்டுக்கள்  இளைஞர்கள்

திண்டுக்கல் : நத்தம் பகுதியை இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பகுதியாக மாற்றிட , அப்பகுதியைச் சேர்ந்த பசுமை நத்தம் இளைஞர் குழு சார்பில், முதல் கட்ட முயற்சியாக அப்பகுதி அம்மன் குளத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்கவிழாவை நடத்தியுள்ளனர்.

natham-green-environment-trees
author img

By

Published : Aug 22, 2019, 6:53 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா என்பது மரங்கள் அடர்ந்த பகுதியாகும். சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்கள், பல்வேறு வகையான தோப்புகள், வனப்பகுதிகள் போன்றவை நத்தம் பகுதியை இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பகுதியாக வைத்திருந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக வெயில் தாக்கம், தண்ணீர் தட்டுப்பாடு, நான்கு வழி சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் மரங்கள் குறைந்து பசுமையான சூழலும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையைக் கண்டு அப்பகுதி மக்கள் அனைவரும் கவலை அடைந்தனர். இருப்பினும் முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்பதற்கு சான்றாக பொதுமக்களே தங்கள் வீடுகள், வயல்வெளிகள். தோட்டங்கள் போன்ற பகுதிகளில் மீண்டும் மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளர்த்து வருகின்றனர்.

natham-green-environment-trees
நத்தம் இளைஞர் குழு சார்பில், முதல் கட்ட முயற்சியாக நத்தம் அம்மன் குளத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் துவக்கவிழாவை நடத்தியுள்ளனர்.

அதன்படி நத்தம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பசுமை நத்தம் இளைஞர் குழு சார்பில், முதற்கட்ட முயற்சியாக நத்தம் அம்மன் குளத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு நத்தம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

முயன்றால் முடியாது ஏதும் இல்லை-நிருபித்த திண்டுக்கள் இளைஞர்கள் !!!

முதல்கட்டமாக அம்மன் குளம் தொடங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகள், குளத்துப் பகுதிகள், கண்மாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோல் ஊராட்சி சாலையோரங்களில் கூண்டுகளுடன் கூடிய மரக்கன்றுகளும் நடப்பட்டது.

இந்த பணி சம்பிரதாய நடைமுறையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள இளைஞர்கள், மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதற்கான தனிக் குழுக்களையும் அமைத்துள்ளனர். இழந்துவிட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Intro:திண்டுக்கல் 21.8.19

இழந்த இயற்கையை மீட்டிட இணைந்த இளைஞர்கள்.Body:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா மரங்கள் அடர்ந்த பகுதியாகும். சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்கள், பல்வேறு வகையான தோப்புகள், வனபகுதிகள் போன்றவை நத்தம் பகுதியை இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பகுதியாக வைத்திருந்தது. இவை அனைத்தும் கடந்த சில மாதங்களாக வெயில் தாக்கம், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் நான்கு வழி சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் கணிசமாக குறைந்தது.

இந்த நிலை கண்டு அப்பகுதி மக்கள் அனைவரும் கவலை அடைந்தனர்.இருப்பினும் முயன்றால் முடியாது ஏதும் இல்லை என்பதற்கு சான்றாக பொதுமக்களே தங்கள் வீடுகள், வயல் வெளியில் தோட்டங்கள் போன்ற பகுதிகளில் மீண்டும் மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளர்த்து வருகின்றனர்.

இதன்படி நத்தம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பசுமை நத்தம் இளைஞர் குழு சார்பில், முதல் கட்ட முயற்சியாக இன்று நத்தம் அம்மன் குளத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா நடைபெற்றது. இதற்கு நத்தம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

முதல்கட்டமாக அம்மன் குளம் தொடங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகள், குளத்துப் பகுதிகள், கண்மாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோல் ஊராட்சி சாலையோரங்களில் கூண்டுகளுடன் கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த பணி சம்பிரதாய நடைமுறையாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ள இளைஞர்கள், மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதற்கான தனிக்குழுக்களையும் அமைத்துள்ளனர். இழந்து விட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மரம் வளர்ப்பு பணியில் தங்களின் பங்களிப்பை முழுமையாக செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.