திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செங்குளம் களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் மாரிமுத்து (வயது 30), விவசாயத் தொழில் செய்து வருகிறார்.
மாரிமுத்துவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஊர் மந்தையில் மாரிமுத்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை அருகிலிருந்த நபர்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தற்போது இரண்டு பேரை கைது செய்துள்ள நத்தம் காவல் துறையினர், மேலும் சில நபர்களைத் தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை!