ETV Bharat / state

திண்டுக்கல், நாகப்பட்டினம் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் வெளியீடு! - வாக்காளர் பட்டியலை வெளியிட்ட திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் இறுதி வரைவுப் பட்டியலை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் வழங்கப்பட்டது. இதுபோல் திண்டுக்கல், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலை அம்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட நகராட்சி ஆணையர் தேவிகா
author img

By

Published : Oct 5, 2019, 10:40 AM IST

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயலட்சுமி

திண்டுக்கல் மாவட்டத்தின் மூன்று நகராட்சி, 14 ஊராட்சிகள், 23 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மு. விஜயலட்சுமி வெளியிட்டார்.

18 வார்டுகளில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

மேலும், அம்மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் குளறுபடியிலிருந்த வாக்காளர் அடையாள அட்டைகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் இரண்டு முறை திருத்தப்பட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயலட்சுமி

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட நகராட்சி தேர்தல் அலுவலர் தேவிகா

இந்நிலையில் நேற்று திண்டுக்கல் முழுவதும் வாக்காளர் இறுதி வரைவுப் பட்டியலை அந்தந்த ஊராட்சிகளில் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அழைத்து, நகராட்சி தேர்தல் அலுவலர் தேவிகா தலைமையில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

நாகை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்

இதேபோல், நாகப்பட்டினம் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சி, 11 ஊராட்சி ஒன்றியங்கள், எட்டு பேரூராட்சிகளில் உள்ள மூன்றாயிரத்து 666 வார்டுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் வெளியிட்டார்.

நாகையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர்

இதில் ஆண் வாக்காளர்கள் ஆறு லட்சத்து 18 ஆயிரத்து 557 பேர், பெண் வாக்காளர்கள் ஆறு லட்சத்து 30 ஆயிரத்து 951 பேர், இதர வாக்காளர்கள் 29 பேர் என மொத்தம் 12 லட்சத்து 49 ஆயிரத்து 537 பேர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : 'பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும்' - மாநகராட்சி ஆணையர்

Intro:திண்டுக்கல். 04.10.19
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை நகராட்சி ஆணையாளர் தேவிகா வெளியிட்டார்.

Body:திண்டுக்கல். 04.10.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை நகராட்சி ஆணையாளர் தேவிகா வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட 18.வார்டுகளிளும் உள்ள வாக்காளர் அட்டைகளில் குளறுபடி இருந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் அடையாள அட்டை இரண்டு முறை திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி வரைவு பட்டியலை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இன்று வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களையும் அழைத்து நகராட்சி ஆணையாளர் தேவிகா தலைமையில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டது.
இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டர்.Conclusion:திண்டுக்கல். 04.10.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை நகராட்சி ஆணையாளர் தேவிகா வெளியிட்டார்.

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.