சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசுப்பொருள்கள் ஆகியவற்றைப் பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளி அருவி பகுதி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், காரில் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 970 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகன உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், அவர் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்த பணத்தை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். மேலும், பறிமுதல்செய்யப்பட்ட பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: பறக்கும் படையின் அதிரடி வேட்டை! கரூரில் ஒரே நாளில் ரூ. 3.7 லட்சம் பறிமுதல்!