ETV Bharat / state

மளிகைக்கடை பூட்டை உடைத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை - Dindigul grocery robbery

திண்டுக்கல்: மளிகைக்கடை பூட்டை உடைத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற திருடர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை
மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை
author img

By

Published : Feb 14, 2020, 7:58 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் தேவசகாயம் என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கல்லாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து பூட்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட திருடர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைத்திருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

அதிகாலையில் கடையை திறக்க வந்தபோது பணம் திருடு போனதை கண்டு தேவசகாயம் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதுர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேலூரில் பிரபல ஷோரூமில் ரூ.40 ஆயிரம் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.