ETV Bharat / state

ஏழை பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் - அமைச்சர் சக்கரபாணி

ஏழை பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதுடன், வீடு கட்டுவதற்கான ஆணையையும் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

healoingpattaபட்டா வழங்கிய அமைச்சர்
healoingpattaபட்டா வழங்கிய அமைச்சர்
author img

By

Published : Jun 19, 2021, 8:40 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் வட்டம், வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும், செல்வராஜ் என்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டா, வீடு கட்டுவதற்கான ஆணையை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு, வீடு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூர் வேலாயுதம்பாளையம் பகுதியில், ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது, செல்வராஜ் என்பவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் கூடாரத்தில் ஏழ்மையில் வசித்து வருவதைக் காண முடிந்தது.

பட்டா வழங்கும் நிகழ்ச்சி
அமைச்சர் சக்கரபாணி, பயனாளியின் குடும்பத்தினருடன்

தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டி தருமாறு கோரிக்கை மனு அளித்தார். கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காரணத்தால், அவரது கோரிக்கையை நிறைவேற்ற இயலவில்லை.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், செல்வராஜ் கோரிக்கையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

ஏழை பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா
ஏழை பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா

ஆட்சியர் உடனடியாக இம்மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார். இதனடிப்படையில், செல்வராஜுக்கு அரசின் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டுவதற்கான ஆணை நேற்று (ஜூன் 18) வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கிடைக்க மாவட்ட நிர்வாகம் மூலமாக முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விசாகன், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன், பழனி வருவாய் கோட்டாட்சியர் ஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் வகுப்புகள் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.