ETV Bharat / state

ரூ.15 கோடி நகைக் கடன் மோசடி - ஐ. பெரியசாமி - periyasamy

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் 30 சதவீதம் நகை மோசடி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை ரூ.15 கோடி நகைக் கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர்  ஐ பெரியசாமி  நகைக் கடன்  நகைக் கடன் மோசடி  கூட்டுறவு வங்கிகள்  வங்கிகள் நகைக் கடன் மோசடி  jewel lone fraudulent  jewel lone  lone  lone fraudulent  Minister of Cooperatives  periyasamy  Minister of Cooperatives said about the jewel lone fraudulent
ஐ பெரியசாமி
author img

By

Published : Oct 29, 2021, 9:08 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று (அக். 28) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதற்கு திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு வளைகாப்பு சீர்வரிசை பொருள்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற நகை மோசடி தொடர்பாக நடத்திய ஆய்வில் பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்தும், நகைகளை வைக்காமலும் இதுவரை ஏறத்தாழ ரூ.15 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

நகைக் கடன் மோசடி குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர்

நகைக் கடன் மோசடி

இதுவரை 30 சதவீதக் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு குழுக்கள் அமைத்து அனைத்துக் கூட்டுறவு சங்கங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வுக்கு அதே மாவட்ட அலுவலர்களை அனுப்பாமல், வெளி மாவட்டங்களில் இருந்து அலுவலர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஆறு மாதத்துக்குள் நிறைவடையும். பணிகள் நிறைவடைந்த பின்னர் இதுபோன்ற தவறுகள் இனி நடைபெற வாய்ப்பில்லை. நகை மோசடி வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைவர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தீபாவளி முடிந்ததும் வெளியிடப்படும். எந்தத் தவறும் நடைபெறாமல் வெளிப்படைத் தன்மையுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "காமராசரைக் கண்டதில்லை - நன்மாறன் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்” - மறுக்க இயலாத மதுரை மக்களின் கூற்று

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.