ETV Bharat / state

கொடைக்கானலில் இந்தாண்டு கோடை விழா உறுதி - அமைச்சர் ஐ.பெரியசாமி - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழா, இந்தாண்டு கண்டிப்பாக நடைபெறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Minister I Periyasamy Press Meet in Kodaikanal

author img

By

Published : Mar 13, 2022, 7:41 PM IST

Updated : Mar 13, 2022, 11:04 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் நீதிமன்றத்தின் வாதாடும் அரங்கம் திறக்கும் நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இன்று (மார்ச் 13) கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "கொடைக்கானலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழா இந்தாண்டு கண்டிப்பாக நடைபெறும்.

மேலும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடுதல் காவலர்களை நியமிக்க அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளோம்" என்றார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர் சந்திப்பு

அதிமுக, அமமுக இணைப்பு குறித்து கேட்கப்பட்ட செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஐ.பெரியசாமி, 'அதிமுக பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை' எனத்தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி,"நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

ஓரிரு தினங்களில் நகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். காட்டுத்தீ ஏற்படுவதைத் தடுப்பதற்கு அலுவலர்கள் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: பழனியில் குவிந்த பக்தர்கள் - கடுமையாகப் பாதிக்கப்பட்ட போக்குவரத்து!

Last Updated : Mar 13, 2022, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.